ஐபிஎல்லுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி ? வீரர்களின் ஜெர்சியில் கையெழுத்திடுவது ஏன் ?

ஐபிஎல்லுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி ? வீரர்களின் ஜெர்சியில் கையெழுத்திடுவது ஏன் ?
ஐபிஎல்லுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி ? வீரர்களின் ஜெர்சியில் கையெழுத்திடுவது ஏன் ?

ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வுப்பெறுகிறாரா தோனி? அதனால்தான் வீரர்களின் ஜெர்சியில் அவர் கையெழுத்திடுகிறாரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுப்பி வருகின்றனர் சில நெட்டிசன்கள்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் தோனி. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி சொதப்பலாக விளையாடியதால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறுகிறது.

ஆனால் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அது வெற்றியோ தோல்வியோ எதிரணி வீரர்கள் தோனியிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள். அவர்களிடம் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்வார் தோனி. கொல்கத்தா அணியுடனான வெற்றிக்கு பின்பு நேற்றுக் கூட வருண் சக்கரவர்த்தி தோனியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தார். அந்த வீடியோவை கொல்கத்தா அணியின் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இது மட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் வீரர்கள் பலரும் ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர். இதற்முன்பு மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா, ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கும் ஜெர்சியில் கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தார் தோனி. இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வுப்பெற்றுவிடுவார். அதனால்தான் வீரர்கள் இப்போதே அவரின் நினைவாக கையெழுத்து வாங்குகின்றனர் என்று கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

இதில், ஜடேஜாவும் தோனியிடம் கையெழுத்து வாங்கியதால்தான் தோனி ஐபிஎல்லுக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதனும் அடுத்தாண்டு சென்னைக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என கூறியிருந்தார். எது இருந்தாலும் தோனியின் முடிவு தோனியின் கையில்தான் இருக்கிறது. அது என்ன என்பதை காலம்தான் பதில் சொல்லும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com