டிரெண்டிங்
வரம்புமீறி நிர்வாகத்தில் தலையிடுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்
வரம்புமீறி நிர்வாகத்தில் தலையிடுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்
அரசு நிர்வாகத்தில் ஆளுநர் வரம்புமீறி தலையீடு செய்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஆளுநர் ஆய்வு நடத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மத்திய அரசின் விருப்பப்படி சூப்பர் முதலமைச்சராக ஆளுநர் நடந்து கொள்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரிகளுடனான ஆளுநரின் ஆய்வு என்பது மத்திய அரசால் தமிழகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதையே வெளிப்படுத்துவதாய் இருப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான இத்தகைய செயலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ள வேல்முருகன், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து தெளிவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.