\
தங்கமோதிரம்
தங்கமோதிரம்புதியதலைமுறை

தவெக மாநாடு | உதவிய கைகளுக்கு அழகுபார்த்த விஜய்.. சத்தமே இல்லாமல் செய்த சம்பவம்!

தவெக வின் முதல் மாநாட்டிற்கு பந்தல் பணியை மேற்கொண்ட நபருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்த விஜய். விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கும் தங்கமோதிரம் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது.
Published on: 

தவெக வின் முதல் மாநாட்டிற்கு பந்தல் பணியை மேற்கொண்ட நபருக்கு தங்க மோதிரத்தை பரிசாக அளித்த விஜய். விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கும் தங்கமோதிரம் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்க்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் 2.50 மணியாளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக்கொண்டுனர்.

கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டிற்காக 90 ஏக்கர் நிலம் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளித்து அவர்களை மரியாதை செய்ததுடன் தாம்பூல தட்டில் வேட்டி புடவைகளும் வழங்கி அவர்களை கௌரவிக்கப்பட்டது.

இதைத்தவிர, மாவட்ட செயலாளருக்கும் மாநாட்டிற்காக பந்தல் பனியை மேற்கொண்ட நபருக்கும் தங்கமோதிரத்தை பரிசாக வழங்கி அவர்களையும் கௌரவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com