\
தூத்துக்குடி : ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் குண்டு வீசி கொலை

தூத்துக்குடி : ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் குண்டு வீசி கொலை

தூத்துக்குடி : ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் குண்டு வீசி கொலை
Published on

தூத்துக்குடி வனப்பகுதியில் பதுயிங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது காவலர் சுப்ரமணியம் என்பவர் குண்டு வீசி கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரவுடியை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீஸார் மீது ரவுடி தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட சக போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதவிர மற்றொரு காவலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து தப்பி ஓட முயன்ற ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அத்துடன் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com