தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கால்கோள் நிக‌ழ்வு

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கால்கோள் நிக‌ழ்வு
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கால்கோள் நிக‌ழ்வு

தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கால்கோள் நிகழ்ச்சி‌ நடைபெற்றது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாவட்டம் வாரியாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அரசு விழாவாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நவம்பர் 22ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படப் உள்ளது. அதற்காக இன்று நடைபெற்ற கால்கோள் நிகழ்ச்சியில்‌ அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி,‌ மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com