காவலரை வெடிகுண்டு வீசிக்கொன்ற ரவுடி உயிரிழப்பு

காவலரை வெடிகுண்டு வீசிக்கொன்ற ரவுடி உயிரிழப்பு

காவலரை வெடிகுண்டு வீசிக்கொன்ற ரவுடி உயிரிழப்பு
Published on

தூத்துக்குடியில் காவலரை வெடிகுண்டு வீசிக்கொன்ற ரவுடி உயிரிழந்திருப்பதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து என்பவர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரவுடியை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீஸார் மீது ரவுடி தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட சக போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதவிர மற்றொரு காவலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காவலர் மீது குண்டு வீசிய ரவுடி துரைமுத்து உயிரிழந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

வெடிகுண்டு வீசியபோது, அதில் துரைமுத்துவும் காயம்பட்டு இறந்திருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ரவுடி துரைமுத்து மீது 2 கொலை வழக்குகள் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com