கடைசி வரை நிறைவேறாத அதிமுகவின் மத்திய அமைச்சரவை கனவு

கடைசி வரை நிறைவேறாத அதிமுகவின் மத்திய அமைச்சரவை கனவு

கடைசி வரை நிறைவேறாத அதிமுகவின் மத்திய அமைச்சரவை கனவு
Published on

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பட்டியலில் அதிமுகவைச் சேர்ந்த யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் குடியரசுத் தலைவர் செய்து வைத்தார். மோடியை அடுத்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பதவியேற்றனர்.

மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கூட்டணிகளுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்ததாக, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது நிச்சயம் அதிமுகவில் இருந்து ஒருவருக்காவது வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், யாருக்கு என்பது குறித்து அதிமுவில் ஒரு குழப்பமான நிலை உள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ் தன்னுடைய மகனுக்காகவும், முதல்வர் பழனிசாமி தரப்பினர் வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com