டிரெண்டிங்
அசந்த புறா... அல்லேக்காக தலையை கவ்விய ஆமை - திகிலூட்டும் வீடியோ
அசந்த புறா... அல்லேக்காக தலையை கவ்விய ஆமை - திகிலூட்டும் வீடியோ
பொதுவாக இயற்கை என்றாலே நம்மை ரசிக்கவைக்கும். சில நேரங்களில் அதற்கு மாறாக இயற்கை நம்மை திகைக்கவும் வைக்கும்.
அதற்கு உதாரணமாக நேற்று நேச்சர் ஈஸ் ஸ்கேரி வெளியிட்ட வீடியோ ஒன்று, இப்படியும் நடக்குமா எனவும் நம்மை யோசிக்கவைக்கிறது. ஆமையின் செயல்கள் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த ஆமை ஒன்று புறாவை தாவிப்பிடிக்கிறது.
பல புறாக்கள் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கின்றன. அங்கு நீரிலிருந்து வெளியே வரும் ஆமை ஒன்று சற்றும் எதிர்பாராமல் கரையில் அமர்ந்திருந்த ஒரு புறாவின் தலையை கவ்விப் பிடித்து நீருக்குள் இழுத்துச் செல்கிறது.
புறாவைக் கொல்லும் ஆமை என தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ நிச்சயமாக திகிலூட்டுகிறது.