தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றம் மாற்றப்படுமா ?
தினகரன் ஆதரவு 17 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வரும் புதன்கிழமை விசாரிக்கிறது. தகுதி நீக்க உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தங்கத் தமிழ்ச்செல்வனை தவிர 17 பேரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
17 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், நீதிபதிகள் இடையே ஏற்பட்ட மாறுபட்ட தீர்ப்பால் இடைத்தேர்தலை 6 மாதத்துக்குள் நடத்த வேண்டும் எனற விதி மீறப்படுவதாகவும், மூன்றாவது நீதிபதி மேல் நம்பிக்கை இல்லாததால் உச்சநீதிமன்றமே வழக்கை விசாரிப்பது சரியாக இருக்கும் என வாதிடப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வரும் புதன்கிழமை (27-ம் தேதி) வழக்கை விசாரிப்பதாக கூறியது. அன்றைய நாள் வழக்கை உயர்நீதிமன்றத்தில் இருந்து விசாரிப்பதா அல்லது உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிடுவதா என உச்சநீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது
முன்னதாக முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்ததால், ஜக்கையனை தவிர 18 பேரும் சபாநாயகரால் தகுதி நீக்கப்பட்டனர். இதற்கு எதிரான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை எதிர்த்தே 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்