ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்
Published on

ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வரை தருவதாக திமுக குற்றம்சாட்டிவருகிறது. நேற்று மட்டும் ரூபாய் 100 கோடி வரை பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே சென்னை கொருக்குப்பேட்டையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்
செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்ட பணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தினகரன் ஆதரவாளரிடமிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை எனக் கூறி தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொருக்குப்பேட்டை காவல்நிலையம் அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாகனம் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com