டிரெண்டிங்
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இருவர் தலைமைச் செயலகம் வருவதாக தகவல்
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இருவர் தலைமைச் செயலகம் வருவதாக தகவல்
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது இருவரும் தலைமைச் செயலகம் செல்வதாகக் கூறிச் சென்றனர். அங்கு யாரைச் சந்திக்க இருக்கின்றனர் என்பது பற்றி கூற மறுத்துவிட்டனர்.
தமிழக முதலமைச்சருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தனர். அதுதொடர்பாக 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் பேரவைத் தலைவருக்கு பரிந்துரைத்திருந்தார். அதைத்தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு 19 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.