டிரெண்டிங்
அறுவைச் சிகிச்சை தொடங்கி விட்டது: டிடிவி ஆதரவாளர்கள்
அறுவைச் சிகிச்சை தொடங்கி விட்டது: டிடிவி ஆதரவாளர்கள்
டிடிவி தினகரன் சொன்ன அறுவைச் சிகிச்சை தொடங்கி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இதனைத் தொடர்ந்து டிடிவி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினரைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் கூறிய அறுவை சிகிச்சை தொடங்கிவிட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோர், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டதாகக் கூறினர். எனவே, முதல்வரை மாற்ற வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.