மீண்டும் ஒரு கூவத்தூரா?... டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி பயணம்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரியில் சென்று தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமியை நீக்கக்கோரி கடிதம் அளித்தனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் 15 பேர் கார்கள் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் மட்டும் சென்னையில் தங்கியுள்ள நிலையில், மற்றவர்கள் புதுச்சேரியில் தங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மூலம் தங்களுக்கு அழுத்தம் தருவதைத் தவிர்க்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.