அ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு: சசிகலாவுக்கு தனி அறை

அ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு: சசிகலாவுக்கு தனி அறை

அ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு: சசிகலாவுக்கு தனி அறை
Published on

சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார். தலைமை அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவை மீட்பதே தமது நோக்கம் என்றார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தில் சசிகலாவுக்காக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com