ஆர்கே நகரில் ஹவாலா பார்முலாவில் டிடிவி தினகரன் வெற்றி: எடப்பாடி பழனிசாமி
கட்சியின் கொள்கையை மறந்து கூடா நட்பு கொண்டு எதிரியுடன் சேர்ந்து வெற்றி பெற்றவர்கள், தனியாக சாதித்தாக பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஒவ்வொரு தொண்டனும் தூணாக நின்று கட்சியை காத்து வருகிறார்கள். இதற்கு முன் திருமங்கலம் பார்முலா என்று சொல்லி வந்ததை மிஞ்சி ஆர்கே நகர் பார்முலா என்ற ஹவாலா பார்முலா மூலம் ஆர்கே நகரில் தினகரன் வெற்றிபெற்றார். கட்சிக்காக உழைக்காமல் கொல்லைப்புறமாக நுழைந்த தினகரன், தங்களை துரோகி என்கிறார். தாங்கள் கட்சியில் உழைத்து முன்னுக்கு வந்தவர்கள்.
கொல்லைப்புறமாக வந்தவர்கள் ஆட்சியை கவிழ்க்கப் பார்ப்பதாகவும், துரோகிகளுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள். ஜெயலலிதா பிறந்தநாளில் மானிய விலையில் இருசக்கர அம்மா வாகனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களின் குடியிருப்புகள் 5 கோடி ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்படும். சுற்றுலாத்தலமான உதகையில் தனியார் பங்களிப்புடன் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று கூறினார்.