\
பெரியார் தத்துவத்தை கூறிய டிடிவி தினகரன்

பெரியார் தத்துவத்தை கூறிய டிடிவி தினகரன்

பெரியார் தத்துவத்தை கூறிய டிடிவி தினகரன்
Published on

பதவி ஆசையில் இருப்பவர்கள் இழிவான காரியங்களில் ஈடுபடுவார்கள் என்ற பெரியார் தத்துவத்தை டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரியாரின் தத்துவம் ஒன்றை தினகரன் ட்விட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் திராவிட கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலைப் பத்திரிக்கையில் 1965ஆம் ஆண்டு வெளியான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப்பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது” என்று பெரியார் கூறிய தத்துவம் இடம் பெற்றுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com