டிரெண்டிங்
இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி பயணம்
இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி பயணம்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி சென்றுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெறவுள்ள விசாரணையில் ஆஜராவதற்காக டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த பிரமுகர்கள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரத்தினசபாபதி உள்ளிட்ட 20 பேர் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி புறப்படும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.