யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் ஒரு துரோகி எனவும் அவர் அதிமுகவை உடைக்க சதி செய்து கொண்டிருக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் உழைப்பால் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டதாகவும் ஆட்சிக்கு துரோகம் செய்த 18 பேருக்கும் தகுதி நீக்கம் இறைவன் அளித்த தண்டனை எனவும் குறிப்பிட்டார். 18 எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கும் கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்நிலையில், யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வருவதாகவும் எடப்பாடி அரசு சுயநலமாக ஆட்சி நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.