திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பேன்: டிடிவி தினகரன்
சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன் என்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், முதல் முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அவருக்கு திமுகவைச் சேர்ந்த கே.என்.நேரு வாழ்த்து தெரிவித்தார். ஆளுநர் உரை முடிந்து வெளியே வந்தபோது, ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சந்தித்துக் கொண்டனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “இந்த அரசு மாற வேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் போராடுகிறேன். எனவே திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் நான் ஆதரிப்பேன். பொங்கலுக்குப் பிறகு எனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நல்ல தீர்ப்பு வந்துவிடும். அப்போது திமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் நாங்கள் ஆதரிப்போம். நானும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ தான். திமுக வெளிநடப்பு செய்தால் நானும் செய்ய வேண்டிய அவசியமில்லை”என்று கூறினார்.