\
“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்

“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்

“சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார் ” - டிடிவி தினகரன்
Published on

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது தவறுதான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதை ஆதரித்து பேசிய போது இதனை இவ்வாறு தெரிவித்தார். 

மேலும், இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், “திரைப்படத்தில் வசனம் பேசுவதைப் போல் பேசிவிட்டார். எந்த மதத்தையும் யாரும் புண்படுத்தக் கூடாது. ஒரு சிலர் செய்யும் குற்றத்திற்காக ஒட்டுமொத்த மதத்தை பற்றி தவறாக பேசக் கூடாது” என்று கூறினார்.

முன்னதாக, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com