\
டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Published on

டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5ஆம் தேதிக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறுக்கு விசாரணைக்காக இன்று சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. ஐரோப்பாவில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோட்டல் பெயரில் 3 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அதில், 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், ஒரு லட்சம் பவுண்ட் வரையும் அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்டதாக 1996ஆம் ஆண்டு டிடிவி தின‌கரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் குற்றவியல் 2ஆவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com