திவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு

திவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு

திவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு
Published on

டோக்கன் கொடுத்து டிடிவி தினகரன் ஆட்களை சேர்ப்பதாக திவகாரன் குற்றஞ்சாட்டிய நிலையில், திவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர் என தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். 

அமமுக சார்பில் நேற்று மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அப்போது அக்கூட்டத்தில் பேசிய அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். மேலும் ஊழல் செய்வதற்காகவே அதிமுக பல திட்டங்களை உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். அதிமுக, அடிமைகளின் திமுகவாக மாறிவிட்டதாக கூறிய அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்தது தொடர்பாக வருமான வரித்துறையினர் தீவிர விசாரனை நடத்த வேண்டும் என்றார்.

“திருப்பரங்குன்றம் தொகுதி எனக்கு சொந்த ஊரான மன்னார்குடி போன்றது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தேர்தலுக்கு பிறகு அமமுகவின் முதல் வெற்றி பொதுகூட்டம், எனது சொந்த மண்னான மன்னார்குடியில் நடக்கும். ஓட்டுக்கு 10,000 வேண்டுமானாலும் திருப்பரங்குன்றத்தில் விநியோகம் செய்யட்டும், நாங்கள் நிச்சயம் வென்று காட்டுகிறோம். தினகரன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் பினாமி ரகசியம் அத்தனையும் வெளியிடப்படும். மன்னார்குடியில் ஒரு பவர் சென்டர் இருந்தது. அது தற்போது ப்யூஸ் போகி உள்ளது” என திவாகரனை மறைமுகமாக தாக்கி டிடிவி தினகரன் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com