\
அதிமுகவில் இணைவதா? - மதுரை ஆதீனத்திற்கு தினகரன் பதில்

அதிமுகவில் இணைவதா? - மதுரை ஆதீனத்திற்கு தினகரன் பதில்

அதிமுகவில் இணைவதா? - மதுரை ஆதீனத்திற்கு தினகரன் பதில்
Published on

தாம் அதிமுகவில் இணைவதாக மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய அவர், அதிமுகவை விட்டு பிரிந்துச் சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றும் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், எங்களை பொருத்தவரை நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்றால் நிச்சயமாக டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார் என்பது உறுதியான செய்தி எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தாம் அதிமுகவில் இணைவதாக மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதிமுகவில், தான் இணைய சமரச பேச்சு நடந்து இருப்பதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து ஆதாரமற்றது என்றும் உண்மையல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com