டிடிவி தினகரன் அதிரடி நீக்கம்: ஈபிஎஸ் அணி தீர்மானம்
டிடிவி தினகரனின் அறிவிப்புகள் அதிமுகவை கட்டுப்படுத்தாது என தீர்மானம் நிறைவேற்றபட்டு உள்ளது.
முதலமைமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று கூட்டினார். இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில், டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகளை தொண்டர்கள் நிராகரிக்குமாறும் அவரது அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்ததும் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதும் செல்லாது என்றும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா இடத்தில் வேறு எவரையும் அமர்த்த தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களே கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.