\
தேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்போம்: டிடிவி தினகரன்

தேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்போம்: டிடிவி தினகரன்

தேசத்துரோக வழக்கை சட்டப்படி சந்திப்போம்: டிடிவி தினகரன்
Published on

தேசத்துரோக‌ வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் செய்தியா‌ர்களை சந்தித்த தினகரன், “ எங்கள் மீது தேசத்துரோக வழக்கு  தொடுக்க முகாந்திரமே இல்லை. சர்ச்சைக்குரிய துண்டு பிரசுரம் விநியோகித்தவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் அணியினர் வீட்டிற்கு போகும் நேரத்தில் ஆட்டம் போடுகிறார்கள். பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பார்கள். அதேபோன்று தான் ஒரு பெண் என்றும் பாராமல் தங்கள் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அத்துடன் மாவட்டச்செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி தன்னுடன் சேர்த்து, புகழேந்தி, வீரபாண்டிசெல்வம் உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com