டிரெண்டிங்
ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக டிடிவி தினகரன் 29-ம் தேதி பதவியேற்பு
ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக டிடிவி தினகரன் 29-ம் தேதி பதவியேற்பு
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வரும் 29-ம் தேதி டிடிவி தினகரன் பதவியேற்கிறார்.
அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுகவை பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது பலரது புருவங்களை உயர்த்த செய்தது. அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வரும் 29-ம் தேதி டிடிவி தினகரன் பதவியேற்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 1.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சபாநாயகர் தனபால் டிடிவி தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.