\
நான் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது: தங்கத் தமிழ்செல்வன்

நான் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது: தங்கத் தமிழ்செல்வன்

நான் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது: தங்கத் தமிழ்செல்வன்
Published on

தான் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “18 எம்எல்ஏக்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன். அந்த 6 துரோகி அமைச்சர்கள் மட்டும் வெளியில் சென்றுவிட்டால் போதும். மற்ற எம்.எல்.ஏக்கள் ஆட்சியை நடத்த 3 வருடம் ஒத்துழைப்பு தருவேன் என டிடிவி தினகரன் நல்ல கருத்தை தான் கூறியுள்ளார். நான் முதலமைச்சராகவும் வாய்ப்புள்ளது. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆகும் போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகும் போது நான் முதலமைச்சர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது” என்று கூறினார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com