\
சசிகலா பரோலில் வருவார்: தினகரன் பேட்டி

சசிகலா பரோலில் வருவார்: தினகரன் பேட்டி

சசிகலா பரோலில் வருவார்: தினகரன் பேட்டி
Published on: 

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளோம். சசிகலாவுக்கு நிச்சயம் பரோல் கிடைக்கும். சில தினங்களில் அவர் பரோலில் வெளியே வருவார். காவல்துறையை கையில் வைத்திருப்பதால் வழக்கு தொடர்கிறார்கள். அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் இடைக்கால நடவடிக்கையே, நிரந்தரமானது அல்ல. தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடுநிலையோடு செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் யாருடனும் சேர வேண்டிய அவசியமில்லை' என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com