“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்" டிடிவி தினகரன்

“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்" டிடிவி தினகரன்

“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்" டிடிவி தினகரன்
Published on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் அதிமுக உடன் இணையாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயளாளர் டிடிவி தினகரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “கடந்த தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழுந்ததற்கான காரணம் திமுகதான்.  குள்ளநரி தனத்தில் கெட்டிக்கார கட்சி திமுக. இம்முறை ராகுலே வருக நல்லாட்சி தருக என கூறியிருக்கின்றனர். பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில் ராகுலை முன்மொழிந்தார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக நலனை பாதுகாக்க வேண்டும் என்றால் இங்குள்ள மாநில கட்சிகள் வலுவானால்தான் முடியும் என தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து நாங்கள் ஒரு சில மாநில கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறோம் நிச்சயமாக கூட்டணி அமைப்போம் என்றார். அமமுக வின் வளர்ச்சியை பிடிக்காமல் அதிமுக-அமமுக இணைய உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார். அமமுக எந்த காலத்திலும் அதிமுக உடன் இணையாது ;அது தற்கொலை முயற்சி என்று கூறினார். எந்தக் கட்சியுடனும் கூட்டனி இல்லாமல் இருந்ததால் தான் கடந்த முறை சட்டமன்றத்திலும் மக்களவைத் தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றிப் பெற்றார் என கூறினார். சட்டமன்ற தேர்தல்களில் வெவ்வேறு கட்சிகளுக்கு எதிராக வாக்களித்த மக்கள் தற்போது மாறிவிட்டனர் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com