எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் டிடிவி தினகரன்

எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் டிடிவி தினகரன்
எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

பதவிப்பிரமாணம் செய்து வைத்த சபாநாயகருக்கு தினகரன் பூங்கொத்து வழங்கினார். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற டி.டி.வி.தினகரனுக்கு சபாநாயகர் தனபால் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com