6வது சுற்று முடிவில் 14,083 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை

6வது சுற்று முடிவில் 14,083 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை
6வது சுற்று முடிவில் 14,083 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 6வது சுற்று முடிவிலும் 29,267 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 2வது இடத்தில் உள்ள மதுசூதனனை விட டிடிவி தினகரன் 14,083 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 6 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 6 சுற்றிலும் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார்.

6வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 29,267 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 15,184 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். மதுசூதனனை விட இதுவரை டிடிவி தினகரன் 14,083 வாக்கு முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 7,983 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,245 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 408 வாக்குகளை பெற்றுள்ளது. தொடர்ந்து 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பின்னடைவையே சந்தித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com