\
ஜெயலலிதா நினைவு தின பேரணி: அனுமதி கோரி தினகரன் தரப்பு மனு

ஜெயலலிதா நினைவு தின பேரணி: அனுமதி கோரி தினகரன் தரப்பு மனு

ஜெயலலிதா நினைவு தின பேரணி: அனுமதி கோரி தினகரன் தரப்பு மனு
Published on

ஜெயலலிதா நினைவு தின பேரணிக்கு அனுமதி கோரி சென்னை காவல் ஆணையரிடம் தினகரன் தரப்பினர் மனு அளித்துள்ளனர்.

உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் வருகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை பேரணிக்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் தினகரன் தரப்பினர் மனு அளித்துள்ளனர். தினகரன் ஆதரவாளர் வி.பி.கலைராஜன் இந்த மனுவை அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com