\
ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன் கண்டனம்

ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன் கண்டனம்

ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன் கண்டனம்
Published on

ஆர்.கே.நகர் மக்களை டிடிவி கமல்ஹாசன் இழிவுபடுத்துவதாக கூறி டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் வெற்றி காசு கொடுத்து வாங்கப்பட்டது என்றால், கமல்ஹாசன் ஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்துகிறாரா..? என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், “எடப்பாடி அணியோ, திமுகவோ குறைசொல்கிறது என்றால் அது தோற்பவர்கள் சொல்வதுதான். ஆனால் கமல்ஹாசனின் பேச்சு அவரது தரத்தை காட்டுகிறது. இதற்கு மேல் இதில் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆர்.கே.நகர் மக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்துவதாகத்தான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com