\
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற லெட்டர்பேடில் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற லெட்டர்பேடில் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்ற லெட்டர்பேடில் தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து
Published on

ஆர்.கே.நகர் சட்டபேரவை உறுப்பினர் என்ற லெட்டர்பேடில் டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஏசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆர்.கே.நகர் சட்டபேரவை உறுப்பினர் என குறிப்பிட்டு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். வாழ்த்து அறிக்கையில், ‘ஏழைகளுக்கு இறங்குகிறவர் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறார்’ என்கிற இயேசு கிறிஸ்துவின் வாக்கியத்தின்படி, ஏழைகளுக்கு உதவும் குணத்தை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டிருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இயேசுபிரான் போதித்த போதனைகளை இதயத்தில் தாங்கிய கிறிஸ்துவ மக்கள், தூய தொண்டினை மக்களுக்கு ஆற்றும் வகையில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகத்திலும் அவர்களின் பணி என்றும் போற்றத்தக்கது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com