\
‘நடராஜன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அல்ல’: டிடிவி தினகரன்

‘நடராஜன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அல்ல’: டிடிவி தினகரன்

‘நடராஜன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அல்ல’: டிடிவி தினகரன்
Published on: 

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர்‌ சசிகலாவின் கணவர் நடராஜன் கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பெங்களுரூ சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் குடும்பத்தில் குழப்பம் இருப்பதாக செய்தி வந்துள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றார். அதிமுகவின் இரு அணிகளும் நிச்சயம் இணையும். மேலும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். நடராஜன் அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல. அவர் எனது சித்தப்பா என்றார். யூகங்களின் அடிப்படையில் நடராஜன் பேசுவதாக கூறிய அவர், என்னையும், திவாகரனையும் கூப்பிட்டு நடராஜன் கண்டித்ததாக கூறுவது தவறான தகவல். திவாகரனுக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என தினகரன் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com