டிரெண்டிங்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு?
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு?
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை அறிவிக்க இருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மம்தா பானர்ஜி நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

