"எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது" : திரிணாமுல் காங்கிரஸ்
மேற்குவங்க தேர்தலில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்கு பதிவானதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் காசிப்பூர் உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளை பாஜக கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னணு இயந்திரத்தில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவானதாகவும் விவிபேட் இயந்திரத்தில், இது காட்டுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மக்களை வாக்களிக்கவிடாமல் பாஜகவினர் மக்களை தடுத்ததாகவும் எனவே இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகாரில் கூறியுள்ளது. அதேபோல், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.