திருச்சி மேற்கு தொகுதி : காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார், பண கவர்கள் பறிமுதல்

திருச்சி மேற்கு தொகுதி : காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார், பண கவர்கள் பறிமுதல்
திருச்சி மேற்கு தொகுதி : காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா புகார், பண கவர்கள் பறிமுதல்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில், நேரடியாக ஒவ்வொரு காவலர்களின் விபரங்களுடன் தேர்தலுக்கு பண கவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கவரிலும் பணம் வைத்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது .

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு தேர்தல் அலுவலர் மற்றும் காவல் உதவி ஆணையர் நேரடியாக சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் 5 காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் உறையூர்,கண்டோண்மென்ட் காவல் நிலையங்களில் கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணையில் காவல்துறையினருக்கு திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய்த கவருடன் விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த கவர்கள் மூலமாக 2000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை தகுதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது அதுவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கன்டோன்மென்ட் உறையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட கவர்கள்(பணத்துடன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com