"எதிர்பாக்கல ஆனா நடந்துடுச்சு" குழந்தை பெற்றெடுத்த trans ஜோடியின் வைரல் பேட்டி!

"எதிர்பாக்கல ஆனா நடந்துடுச்சு" குழந்தை பெற்றெடுத்த trans ஜோடியின் வைரல் பேட்டி!

"எதிர்பாக்கல ஆனா நடந்துடுச்சு" குழந்தை பெற்றெடுத்த trans ஜோடியின் வைரல் பேட்டி!

மாற்றுப்பாலின தம்பதியாக இருக்கும் திருநம்பி ஒருவர் தன்னையே அறியாமல் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது அந்த ஜோடியிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திருநங்கை, திருநம்பி ஜோடியாக இருப்பவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் விவகாரம் ஒன்றும் அத்தனை சுலபமான செயல் அல்ல. இது நியூயார்கை சேர்ந்த 27 வயது நினோ மற்றும் அவரது காதலியான 22 வயது ஜோஸ்லினை பற்றியது.

அமெரிக்காவின் உள்ளூர் ஊடகத்திடம் பேசியிருக்கிறார்கள் இந்த மாற்றுப்பாலின ஜோடி. அதில் முதலில் பேசிய நினோ, 18 வயதாக இருக்கும் போது தான் திருநம்பி என உணர்ந்ததை அடுத்து ஹார்மோன் தெரப்பி எடுத்துக் கொண்டேன் என்றிருக்கிறார். அதேபோல, தான் ஒரு திருநங்கை என உணர்ந்ததும் தன் அம்மாவின் அழகு சாதனப் பொருட்களை அணியத் தொடங்கியதாக ஜோஸ்லின் கூறியிருக்கிறார்.

நினோவும், ஜோஸ்லினும் LGBTQ-க்கான டேட்டிங் தளம் மூலம் பேசத் தொடங்கி காதலித்து வந்திருக்கிறார்கள். அதன் பிறகு இருவருக்குள்ளுமே பெற்றோராகவேண்டும் என்ற எண்ணம் இருந்த போது, ஜோஸ்லின் பார்ப்பதற்கு பெண் தோற்றத்தில் இருப்பதால் அவர் குழந்தை பெற்றெடுப்பார் என நம்பியிருக்கிறார்கள். மாறாக ஆண் தோற்றத்தில் இருக்கும் நினோ குழந்தை பெற்றெடுத்திருக்கிறார்.

“குழந்தை பெற்றெடுப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அத்தனை நாட்களும் வயிற்றில் வலி இருந்ததாகவே நினைத்தேன். ஆனால் என்ன, பாத்ரூமில் குழந்தை வெளியே வந்திருக்கிறது. இது இயற்கையின் நியதியாகவே எடுத்துக் கொள்கிறோம்.” என நினோ யூடியூப் சேனலிடம் கூறியுள்ளார்.

இதன் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதை அத்தனை நாட்களாக நினோ உணர்ந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் நினோ-ஜோஸ்லின் ஜோடி தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜூலியன் என பெயரிட்டிருக்கிறார்கள்.

மேலும் எதிர்காலத்தில் மகன் ஜூலியன் தங்களுடைய அடையாளம் குறித்து எப்படி உணருவான் என்பது குறித்த அச்சம் இருப்பதாகவும் நினோ-ஜோஸ்லின் ஜோடி கூறியிருக்கிறது. கடந்த ஆண்டு 2021 ஜூன் மாதம் வெளியான திருநங்கை ஜோடியின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com