தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தடம், நேரங்கள்... முழு விவரம்..!

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தடம், நேரங்கள்... முழு விவரம்..!
தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் தடம்,  நேரங்கள்... முழு விவரம்..!

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் அரசு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நடைமுறையில் உள்ள நிலையில் திங்கட்கிழமையிலிருந்து செயல்படும் ரயில் சேவைக்கான முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில் ரயில்கள் புறப்படும் நேரம், இடம், சென்றடையும் நேரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

1. கோவை டூ சென்னை சென்ட்ரல் : இன்டர் சிட்டி சிறப்பு ரயில் (02675)- சென்னையில் புறப்படும் நேரம் - காலை 6.10 மணி, சென்றடையும் நேரம் - பிறபகல் 2.05 மணி

மறுமார்க்கம் - புறப்படும் நேரம் - பிற்பகல் 3.15 மணி, சென்றடையும் நேரம் - இரவு 11 மணி

வழித்தடங்கள் - பெரம்பூா், அரக்கோணம், வாலாஜா சாலை, காட்பாடி சந்திப்பு, ஆம்பூா், ஜோலார்பேட்டை, மொரப்பூா், சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூா்.

2. கோவை டூ மயிலாடுதுறை ( செவ்வாய்கிழமை தவிர்த்து) - ஜன்சதாப்தி சிறப்பு ரயில்( 02084) - கோவையில் புறப்படும் நேரம் - காலை 7.10 மணி, சென்றடையும் நேரம் - பிற்பகல் 1.40 மணி

மறுமார்க்கம் - புறப்படும் நேரம் - பிற்பகல் 2.50 மணி, சென்றடையும் நேரம் - இரவு 9.15 மணி

3. சென்னை டூ கோவை - இன்டா்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில் (02679)- சென்னையில் புறப்படும் நேரம் - காலை 2.30 மணி, சென்றடையும் நேரம் - இரவு 10.15 மணி

4. கோவை டூ சென்னை - இன்டர் சிட்டி ரயில் (02680) - கோவையில் புறப்படும் நேரம் - காலை 6.15 மணி, சென்றடையும் நேரம் - பிறபகல் 1.50 மணி

5. சென்னை டூ கோவை - (02673) -  சென்னையில் புறப்படும் நேரம் - இரவு 10 மணி, சென்றடையும் நேரம் - காலை 6 மணி

6. கோவை டூ சென்னை - (02674) - கோவையில் புறப்படும் நேரம் - இரவு 10. 40 மணி, சென்றடையும் நேரம் - காலை 6. 35 மணி

7. சென்னை எழும்பூா் டூ திருச்சி - சிறப்பு ரயில் (06795) - சென்னையில் புறப்படும் நேரம் - காலை 8 மணி, சென்றடையும் நேரம் - மாலை 4 மணி

8. திருச்சி டூ சென்னை எழும்பூர்- சிறப்பு ரயில்( 06796) புறப்படும் நேரம் - திருச்சியில் காலை 10 மணி, சென்றடையும் நேரம் - மாலை 5.50 மணி

9. சென்னை எழும்பூா் டூ காரைக்குடி - அதிவிரைவு சிறப்பு ரயில் (02605)- சென்னையில் புறப்படும் நேரம் - பிற்பகல் 3.45 மணி, சென்றடையும் நேரம் - இரவு 11.10 மணி

10. காரைக்குடி டூ சென்னை எழும்பூர் - அதிவிரைவு சிறப்பு ரயில் (02606) - புறப்படும் நேரம் - காரைக்குடியில் அதிகாலை 4.45 மணி, சென்றடையும் நேரம் - பிற்பகல் 12.10 மணி

11.சென்னை எழும்பூா் டூ மதுரை - அதி விரைவு சிறப்பு ரயில் (02635) சென்னையில் புறப்படும் நேரம் - பிற்பகல் 1.40 மணி , சென்றடையும் நேரம் - இரவு 9.15 மணி

12. மதுரை டூ சென்னை - சிறப்பு ரயில் (02636)- மதுரையில் புறப்படும் நேரம் - காலை 7 மணி, சென்றடையும் நேரம் - பிற்பகல் 2.35 மணி

13.சென்னை எழும்பூர் டூ மதுரை - சிறப்பு ரயில் - தினசரி இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கம் - இரவு 9. 20 மணிக்கு இயக்கப்படும்.

14. சென்னை எழும்பூா்-தூத்துக்குடி: புறப்படும் நேரம் - சென்னையில் இரவு 7.35 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.45 மணி

15. தூத்துக்குடி டூ சென்னை எழும்பூர் - தூத்துக்குடியில் புறப்படும் நேரம் - இரவு 08.05 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 7.35 மணி

16.சென்னை எழும்பூா்- செங்கோட்டை (வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் ) - சென்னையில் புறப்படும் நேரம் - இரவு 08.25 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 9 மணி

17. செங்கோட்டை டூ சென்னை (வெள்ளி சனி ஞாயிறு) - செங்கோட்டையில் புறப்படும் நேரம் - மாலை 04.45 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 5.30 மணி

18. சென்னை எழும்பூா் டூ கன்னியாகுமரி - சென்னையில் புறப்படும் நேரம் - மாலை 05.15 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.30 மணி

மறுமார்க்கம் - புறப்படும் நேரம் - மாலை 05.05 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.15 மணி

19. சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் - சென்னையில் புறப்படும் நேரம் - இரவு 09.05 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 6.15 மணி மறுமார்க்கம் புறப்படும் நேரம் - இரவு 07.45 மணி, சென்றடையும் நேரம் - மறு நாள் காலை 4..50 மணி

20. திருச்சி டூ நாகர் கோயில் புறப்படும் நேரம் - காலை 6 மணி, சென்றடையும் நேரம் - மதியம் 1 மணி

மறுமார்க்கம் பிற்பகல் பிற்பகல் 3 மணி, சென்றடையும் நேரம் - இரவு 9. 45 மணி

பயணிகள் பயணச்சீட்டுடன், 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்தை அடைய வேண்டும். முகக்கவசம் கட்டாயம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com