குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பு: சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்  

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பு: சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்  

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பு: சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் ஏமாற்றம்  
Published on

குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தென்காசி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர்  30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தடை அமலில் இருக்கும்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு தந்து, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com