கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை  – சோனியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டாக கடிதம்!

கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை – சோனியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டாக கடிதம்!

கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை – சோனியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டாக கடிதம்!
Published on

கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கூட்டாக கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.  

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை  நடைபெறவுள்ளது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரை தோ்ந்தெடுப்பது தொடா்பாக விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், விவேக் தங்கா, ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும்; களத்தில் முழுநேரம் செயல்படக்கூடிய தலைவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சியை மறு சீரமைக்க வேண்டும்; கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட முக்கிய விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்து வருவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நெருங்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள வலுவான தலைமை தேவை ஆகியவை குறித்தும் கடிதத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com