குஜராத்தை விட தமிழகம் அதிக வளர்ச்சி: தம்பிதுரை

குஜராத்தை விட தமிழகம் அதிக வளர்ச்சி: தம்பிதுரை

குஜராத்தை விட தமிழகம் அதிக வளர்ச்சி: தம்பிதுரை
Published on

பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தை விட தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை பெருமிதம் தெரிவித்துள்ளார். 

கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தம்பிதுரை, “ இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு தான் சென்றதாகவும் குஜராத்தில் மோடி இருந்தும் கூட அங்கே சாலை, குடிநீர் பிரச்னை உள்ளது. ஆனால் தமிழகம் நல்ல சாலை வசதி, பேருந்து வசதி என நன்கு வளர்ந்துள்ள மாநிலமாக உள்ளது” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “அண்ணாவின் கொள்கை காப்பது மக்களின் கடமை. பெரியார் கொண்டு வந்த திராவிட இயக்கத்தை எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காத்தனர். அந்த இயக்கத்தை அழிக்க நினைப்பது தவறு. அழிக்கவும் முடியாது. தமிழ் வழக்காடு மொழி என்பது அதிமுகவின் கொள்கை. அதற்காகப் பாடுபடுவோம்” எனக் கூறினார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com