ஐபிஎல் 2020: வாழ்வா? சாவா? போட்டியில் ஹைதராபாத்... இன்று மும்பையுடன் பலப்பரீட்சை..!!

ஐபிஎல் 2020: வாழ்வா? சாவா? போட்டியில் ஹைதராபாத்... இன்று மும்பையுடன் பலப்பரீட்சை..!!

ஐபிஎல் 2020: வாழ்வா? சாவா? போட்டியில் ஹைதராபாத்... இன்று மும்பையுடன் பலப்பரீட்சை..!!
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியான இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஷார்ஜாவில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பொல்லார்டு தலைமையிலான மும்பை அணி நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளைப் பதிவு செய்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 8 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌பிளே ஆஃப் செல்ல வேண்டுமெனில் வென்றே ஆக வேண்டும் என்ற அழுத்தமிக்க சூழலில் மும்பைக்கு எதிராக இன்று களமிறங்கவுள்ளது ஹைதராபாத் அணி.

பேட்டிங்கில் மேல்வரிசை வீரர்களை மட்டுமே நம்பி அணி பயணித்து வருகிறது அந்த அணி. வார்னர், சாஹா, மற்றும் மணிஷ் பாண்டே ஆட்டமிழந்தால் அணியின் ரன் வேகம் முற்றிலும் சரிந்துவிடுகிறது. அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் இன்னும் பெரிய பங்களிப்பு எதையும் வழங்கவில்லை. ஆல்ரவுண்டர் ஹோல்டர் மெச்சத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது மத்திய வரிசைக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்கள் பிரியம் கார்க், அப்துல் சமத் மற்றும் அபிஷேக் சர்மா நெருக்கடியான சூழலை திறம்பட எதிர்கொள்ள சற்று திணறுகின்றனர். மாயாஜால சுழல் வீரர் ரஷித் கான் தனது பணியை செவ்வனே செய்து எதிரணி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தி வருகிறார். யார்க்கர் மன்னன் நடராஜன் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது பந்து வீச்சிற்கு கூடுதல் பலம்.

பிளே ஆஃப்பை முதல் அணியாக உறுதி செய்துவிட்டு எவ்வித அழுத்தமுமின்றி களமிறங்கவுள்ளது மும்பை அணி. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சமபலம் பொருந்தியுள்ள மும்பை அணி, கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பேசப்படுகிறது. பேட்டிங் மேல்வரிசையில் டிகாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அசத்தலான ஃபார்மில் உள்ளனர்.

கேப்டன் பொல்லார்டு, குருனால் பாண்ட்யா, சவுரப் திவாரி ஆகியோர் மத்திய கள வீரர்களாக பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொருத்தவரையில் யார்க்கர் மன்னன் பும்ரா, எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ராகுல் சாஹரின் சுழற்பந்துகள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அஸ்திரங்களாக வலுசேர்க்கின்றன. போல்ட், பேட்டின்சன் ஆகியோர் பந்து வீச்சிற்கு பலம் சேர்க்கின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வென்றால் அது பிளே ஆஃபுக்கு செல்லும். அதே நேரத்தில் கொல்கத்தா அணி வெளியேறிவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com