வெளிநாடு சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக பிரிட்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் கடும் வெயில் கொளுத்திய நிலையில் இரவில் பரவலாக கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தனியார் மற்றும் பொது இடங்களில் நெகிழிப் பொருட்களை எரித்தால் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது தொடர்பாக மாநகராட்சி வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்த 32 பேருக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.
யூனியன்பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக லடாக்கிற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்கிறார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை உச்ச நீதிமன்றம் இன்று வரை நீட்டித்துள்ளது.