இன்றைய காலை தலைப்புச் செய்திகள்: பொங்கல் கொண்டாட்டம் - டி 20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது புதுப்பானையில் பொங்கல் வழிபாடு முதல் டி 20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
 காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்: 

 • தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம். புதுப்பானையில் பொங்கலிட்டு மக்கள் வழிபாடு

 • சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம். காலை 11.30 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.

 • மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி. வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசு.

 • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உள்ளூர் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என புகார்.

 • அயோத்தியில் களைகட்டிய மகர சங்கராந்தி. மகா ஆரத்தி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்.

 • மணலி, எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு.

 • அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆன்மிக விழா அல்ல, அரசியல் விழா என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விமர்சனம்.

 • DMK FILES 3 கோப்புகளை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக அரசியலை மாற்றக்கூடிய முழு சக்தி என பேச்சு.

 • மாலத்தீவுகளில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற அதிபர் முகமது முய்சு உத்தரவு.

 • ஐஸ்லாந்து நாட்டில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வெடித்து சிதறிய எரிமலை. குடியிருப்புக்குள் நெருப்பு குழம்பு புகுந்ததால் வீடுகள் சேதம்.

 • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. தொடரை கைப்பற்றி இந்திய அணி அசத்தல்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com