காலை தலைப்புச் செய்திகள்|போகி பண்டிகை கொண்டாட்டம் To ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியின் தோல்வி!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது போகி பண்டிகை முதல் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியின் தோல்வி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • 'பழையன கழிதலும் புதியன புகுதலுமாய்' வந்துவிட்டது போகி

  • பண்டிகை. பழைய பொருட்களை தீயில் எரித்து கொண்டாடிய பொதுமக்கள் பொங்கலுக்காக சொந்த ஊர்களை நோக்கி லட்சக்கணக்கானோர் பயணம்

  • சென்னை புறநகர் பகுதிகளில் நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற வாகனங்கள். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள்...

  • வெள்ள நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம். அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் குழு சந்தித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு.

  • இடம்பிடிக்க முண்டியடித்த பயணிகள்.ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை ஓடிக்கடந்து ஏற முயற்சி.

  • தமிழகத்தில், மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பொங்கலுக்கு பின் இறுதி செய்யப்படும்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி...

  • இரண்டாம் கட்ட நடைபயணத்தை இன்று தொடங்கிறார் ராகுல்காந்தி. மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம்.

  • கேரளாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. பின்னால் வந்த இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கிய கோர காட்சி.

  • சீனாவின் எச்சரிக்கைக்கு மத்தியில் நடந்த தைவான் அதிபர் தேர்தல். புதிய அதிபராகிறார் ஆளும் கட்சி வேட்பாளர் லாய் சிங்-டே

  • ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஹாக்கிப் போட்டி. அமெரிக்காவிடம் பணிந்தது இந்திய மகளிர் அணி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com