MI vs KXIP : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்.. இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்.!

MI vs KXIP : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்.. இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்.!
MI vs KXIP : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்.. இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம்.!

நடப்பு சீசனில் ஆதிக்கம் மிக்க அணியாக வலம் வரும் மும்பை. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பஞ்சாப். இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

வலுவான நெட் ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது மும்பை அணி. பேட்டிங் மேல்வரிசையில் குவிண்டன் டிகாக், ரோகித் சர்மா, சூர்யாகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் தூண்களாக உள்ளனர். மத்திய வரிசையில் பாண்ட்யா சகோதரர்களும், பொல்லார்டும் பக்கபலமாக உள்ளனர். பந்து வீச்சில் வேக வேங்கைகளான போல்ட் மற்றும் பும்ரா எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் அஸ்திரங்களாக உள்ளனர். சுழல் சூத்திரதாரியான ராகுல் சாஹர் முக்கிய கட்டங்களில் விக்கெட்டுகளை சரிக்கும் அஸ்திரமாக வலம் வருகிறார். புதிதாக களமிறக்கப்பட்ட கூல்ட்டர் நைல் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பின்னடைவே.

ஆட்டத்தை அமர்க்களமாக தொடங்கினாலும், பரபரப்புமிக்க இடங்களில் தவறுவதால் பல வெற்றிகளை தவறவிட்டுள்ளது பஞ்சாப் அணி. பேட்டிங்கில் கேப்டன் ராகுல் முன்னின்று வழிநடத்துவதும் அணிக்கு பெரும்பலம். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்பியுள்ள கூடுதல் பலம். மயங்க் அகர்வால், பூரன் ஆகியோரின் பங்களிப்பும் அணிக்கு வலுசேர்த்து வருகிறது. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லும் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் பஞ்சாப் பேட்டிங்கில் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷமி, கிறிஸ் ஜோர்டன் மற்றும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆறுதல் அளித்து வருகிறார். சுழற்பந்து வீச்சில் பிஷ்னாய் மற்றும் முருகன் அஸ்வின் பக்கபலமாக உள்ளனர்.

களமிறங்கும் அனைத்துப் போட்டிகளையும் வென்றால் பஞ்சாப் அணி பிளே ஆஃப்-க்கு தகுதி பெற இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்பது இந்தபோட்டியின் முக்கிய அம்சமாகும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com