இன்றைய ஐபிஎல் போட்டிகள்: பஞ்சாப் vs கொல்கத்தா; சென்னை vs பெங்களூர்!

இன்றைய ஐபிஎல் போட்டிகள்: பஞ்சாப் vs கொல்கத்தா; சென்னை vs பெங்களூர்!

இன்றைய ஐபிஎல் போட்டிகள்: பஞ்சாப் vs கொல்கத்தா; சென்னை vs பெங்களூர்!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான ‌பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 17 போட்டிகளிலும், ‌பஞ்சாப் அணி ‌8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

 துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூர் அணி ‌8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com