டிரெண்டிங்
ஐபிஎல் 2020: ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஐபிஎல் 2020: ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 10 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.